தென்காசி,டிச.9: மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குற்றாலம் ராமாலயம் பண்பொழி திருமலைக் குமாரசாமி கோயில் தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா மேலகத்தில் பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜீவானந்தம், திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, ஒன்றியச் செயலாளர் அழகுசுந்தரம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியைகள் கவிதா, ஆதிநாச்சியார் ஜானகி வரவேற்றனர். நிகழ்வில் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் 65 பேருக்கும், ராமாலயம் பள்ளி மாணவிகள் 32 பேருக்கும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் இலவச சைக்கிள்கள் வழங்கினார். விழாவில் திமுக ஒன்றிய பிரதிநிதி கபிலன், பகவதிராஜ், குருசாமி,பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துவேல், பரமசிவன், குத்தாலிங்கம், பேரூர் இளைஞர் அணி பார்த்திபன், மதிமுக வெங்கட் ஆசிரியர்கள் துரை, சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆசிரியை ரெஜினா பானு நன்றி கூறினார்.
மேலகரம், குற்றாலம் ராமாலயம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
- Melakaram
- குற்றாலம் ராமாலயம்
- தென்காசி
- மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி
- குற்றாலம் ராமாலயம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயில் தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- வேணி வீரபாண்டியன்
- துணை ஜனாதிபதி
- ஜீவானந்தம்
- திமுக…
