செங்கோட்டை, டிச. 9: செங்கோட்டை பாரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையோரம் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மது குடிக்க வந்த செங்கோட்டை மற்றும் கட்டளை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த இரு பிரிவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் மோதிக்கொண்டனர். இதில் செங்கோட்டையை சேர்ந்த இருவரது தலையில் பாட்டிலை கொண்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மேலும் இருவர் காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படும் நிலையில் சம்பவம் குறித்து செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
செங்கோட்டை பாரில் இரு தரப்பினர் மோதல்
- செங்க்கோட்
- செங்கொட்டாய்
- செங்கோட்டை பார்
- புதூர்
- கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை
- தென்காசி மாவட்டம், செங்கோட்டை
