தூத்துக்குடியில் கம்யூ. விசிக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, டிச. 9: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் கரும்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (லெனினிஸ்ட்) மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், இந்திய கம்யூ. நிர்வாகக்குழு உறுப்பினர் லோகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வில்லவன் கோதை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: