சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம் ஜனாதிபதி முர்மு 22ம் தேதி வருகை

திருவனந்தபுரம்: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் அபாயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 22ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். பம்பையில் இருந்து அவர் இருமுடிக் கட்டுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. சன்னிதானத்தில் ஜனாதிபதி ஓய்வெடுப்பதற்கான அறைகளும் சீரமைக்கப்படுகின்றன.

Related Stories: