30 வருடங்களுக்கு பிறகு உருவாகும் கரகாட்டக்காரன் 2

1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடிப்பில் வெளியாகி வெள்ளிவிழா ெகாண்டாடிய படம், கரகாட்டக்காரன். தற்போது அதன் 2ம் பாகம் உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து கங்கை அமரன் கூறுகையில், ‘கரகாட்டக்காரன் 2 உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

ராமராஜன் உள்பட அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது. கரகாட்டக்காரன் படத்தில் நடித்தவர்களுக்கு குழந்தை பிறந்து, இரண்டு தலைமுறைகளும்  இப்போது சந்தித்தால் எப்படி இருக்கும் என்பது போல் கதை உருவாக்கப்படுகிறது’ என்றார்.

Related Stories: