திருப்புவனம், ஜூலை 10: திருப்புவனம் பெரிய கோவில் வீதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, நமக்கு நாமே என குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். வைகை ஆற்றங்கரையில் பிள்ளையார்கோவிலுக்கு அருகில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் திடக்கழிவுகளை அகற்றி இளைஞர்களே களத்தில் இறங்கி, அப்பகுதியை சுத்தம் செய்துள்ளனர்.அந்த இடம் குப்பைகள் குவிந்து தேங்கி கிடந்ததால், மக்கள் நடந்து செல்வதற்கே அச்சப்பட்டனர். இளைஞர்களின் இந்த முயற்சியால், இன்று அந்த இடம் சுத்தமாகவும், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலும் மாறியுள்ளது. இளைஞர்களின் செயல் அப்பகுதி மக்களில் பாராட்டுப் பெற்றது.
