விவசாயி வீட்டில் ரூ.1.28 லட்சம் திருட்டு

 

தர்மபுரி, ஜூலை 10: தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி ரங்கன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு(65), விவசாயி. இவர் சொந்த வேலையாக குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சேட்டு கொடுத்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Related Stories: