அடுத்தடுத்து 2 லாரிகள் கார் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

 

நல்லம்பள்ளி, ஜூலை 10:தொப்பூர் கணவாய் பகுதியில் 2 லாரிகள், கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி, சொகுசு கார் ஒன்று நேற்று மதியம் சென்றது. தொப்பூர் கணவாய் அருகே சென்ற போது, ஆஞ்சநேயர் கோயில் அருகே காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனை பார்த்து சுதாரித்த கார் டிரைவரும் பிரேக் பிடித்தார். அந்த நேரத்தில், காரின் பின்னால் வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய கார், முன்னால் நின்றிருந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகளுக்கு மத்தியில் சிக்கிய காரின் முன்பகுதி, அப்பளம் போல் நொறுங்கியது.

Related Stories: