முத்துப்பேட்டையில் அரசு இடத்தில் குப்பை கொட்டுவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை

 

முத்துப்பேட்டை, ஜூலை 10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆலங்காடு கிராம எல்லையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வந்தது. தற்பொழுது மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்ததையடுத்து நகரில் குப்பைகள் அதிகளவில் சேருவதால் இந்த குப்பை கிடங்கு போதுமானதாக இல்லாமல் போனது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்க்கேடு ஏற்ப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குப்பை கொட்டுவற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Stories: