திருத்துறைப்பூண்டி, ஜூலை 10: திருத்துறைப்பூண்டி அருகே திருப்பத்தூர் பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தர பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருப்பத்தூர் வழியாக களப்பால் செல்லும் சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. இந்த தார் சாலையில் ஒரு சில இடங்களில் மட்டும் குறிப்பாக திருப்பத்தூர் மில் அருகே சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் இரவு நேரங்களில் வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகின்றன. குறிப்பாக சாலையில் ஒரு சில இடங்களில் மட்டும் சேதம் அடைந்துள்ளதை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
