ஓசூர், ஜூலை 10: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து, ஓசூர் மாநகராட்சியில் 15வது புத்தகத் திருவிழாவை வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடத்துகிறது. ஓசூர் தனியார் ஓட்டல் கூட்டரங்கில், 12 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில், 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதில், தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான பதிப்பகங்கள் மூலமாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலக்கியம், வரலாறு, அறிவியல் சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் மாநில அளவிலான சதுரங்க போட்டி, மாணவர்களுக்கான கதை எழுதும் போட்டி, ரத்த தான முகாம் ஆகியவை நடைபெற உள்ளது என புத்தகத்திருவிழா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
