மலேசியாவிலிருந்து திருச்சி வந்தவர் மாயம்

 

திருச்சி, ஜூலை 10: மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் தமிழன் நகரை சேர்ந்தவர் உமா சித்ரா தமிழ்செல்வன் (40). இவரது கணவர் நித்திரம்பாக்கம் விஜயகுமார் (41). இவர் மலேசியாவில் உள்ள ஒரு சரக்கு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30ம் தேதி விஜயகுமார் மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். தொடர்ந்து அவரது மனைவியை தொடர்பு கொண்டு கடனை அடைத்து விட்டு வீட்டிற்கு வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து நேற்றுமுன்தினம் (8ம் தேதி) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வந்த விஜயகுமார் தனது மனைவியிடம் தான் திருச்சி வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: