மும்முனை மின்சாரம் இல்லாததால் குறுவை சாகுபடி வயல்களில் வெடிப்பு

 

தஞ்சாவூர், ஜூலை 10: தஞ்சை அருகே வடக்குபட்டு கிராமத்தில் சாகுபடி செய்திருந்த குறுவை சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறையால் வயல்கள் அனைத்தும் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரும் வேதனையில் இருந்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, குறுவை, தாளடி என மூன்று போகும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பாக்கப்பட்டு தற்போது வரை சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்று உள்ளது.

 

Related Stories: