நியாயவிலை கடைகளில் நாளை பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

 

திருச்சி, ஜூலை 10: திருச்சி மாவட்டத்தில் நியாயவிலை கடைகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் பொருட்டும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: