மதுரை பூ மார்க்கெட்டில் கடை மீட்பு: வேளாண் வணிகத்துறை நடவடிக்கை

 

மதுரை, ஜூலை 10: மதுரை பூ மார்க்கெட்டில் ஒருவரது கடையை மற்றொருவர் ஆக்கிரமித்திருந்த நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில் வேளாண் வணிகத்துறையினர் கடையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் வேளாண் விளைபொருள் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூ மார்க்கெட்டில் கே 287 என்ற எண் கொண்ட கடையை, பாண்டி என்பவர் அவரது மனைவி பாரதி தேவி பெயரில் பத்திரப்பதிவு செய்து, விற்பனை குழு மூலம் பெற்றுள்ளார். இந்நிலையில் இக்கடைக்கு முன்பாகவும், உள்புறத்திலும் ஆக்கிரமிப்பு செய்து அவர்களை வணிகம் செய்ய விடாமல், மணிகண்டன் மற்றும் சிலர் தடுத்து வந்ததாக தெரிகிறது

Related Stories: