உத்தரப்பிரதேசத்தில் கனமழை மற்றும் சூறைக்காற்றால் 5 மாவட்டங்களில் 86 பேர் உயிரிழப்பு

 

உத்தரப்பிரதேசத்தில் கனமழை மற்றும் சூறைக்காற்றால் 5 மாவட்டங்களில் 86 பேர் உயிரிழந்தனர். பிரயக்ராஜ், படோகி உள்பட 5 மாவட்டங்களில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ரவிதாஸ் நகர், பதேபூர், மிர்சாபூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழைக்கு பிரயக்ராஜ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். சூறைக் காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், வீடுகள், சுவர்கள் இடிந்து விழுந்ததாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

Related Stories: