தோல்வி பயத்தில் பாஜக செய்யும் அட்டூழியங்களுக்கு தமிழ்நாடு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என செல்வப்பெருந்தகை பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களது பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் “இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: