விருதுநகர் பட்டாசு விபத்தில் 25 பேர் உயிரிழப்பு; உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி மனு!

 

விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று நடந்த பட்டாசு விபத்தில் 25 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பட்டாசு ஆலை நிர்வாகம் வழக்கமாக வழங்கும் தலா ரூ.5.50 லட்சத்தை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தர உள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் தலைமறைவாக உள்ளதால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டனார்பட்டி வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் ஈஸ்வரி, கணவர் முத்துமாணிக்கம் தலைமறைவாக உள்ளார். தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளருடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் ஈஸ்வரி, அவரது கணவர் முத்துமாணிக்கம் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Related Stories: