வெள்ளிமலை – சின்னதிருப்பதி இடையே ரூ.139 கோடியில் தார் சாலை

*40 ஆண்டுகால கனவை நிறைவேற்றிய திமுக அரசு

சொன்னாரு..! செஞ்சாரு..!!

சின்னசேலம் : கல்வராயன்மலையில் உள்ள 50 கிராம மக்களின் நூற்றாண்டு கோரிக்கையான வெள்ளிமலை – சின்னதிருப்பதி இடையே ரூ.139 கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப்பகுதியில் அமைந்துள்ளது 1,000 ஆண்டுகள் பழமையான சின்னதிருப்பதி சீனிவாசமூர்த்தி பெருமாள் கோயில் உள்ளது.

இந்த கோயில் திருப்பதி கோயிலுக்கு இணையாக உள்ளதால் இதை சின்னதிருப்பதி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

பண்டைக்காலத்தில் இந்த கோயிலுக்கு தகரை, கல்லாநத்தம் உள்ளிட்ட கிராம மக்கள், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார மக்கள் செல்ல சாலை வசதி இல்லாததாலும், அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாலும் புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவிற்கு மாயம்பாடி, அக்கராயபாளையம் வழுக்கு பாறை வழி, கல்லாநத்தம் வழி, செருவாச்சூர் வழி, வெள்ளிமலை வழியாக நீண்ட தூரம் நடந்து வந்து வழிபாடு செய்து சென்றனர்.

அதைப்போல வெள்ளிமலை பகுதியில் இருந்து மேல்பாச்சேரி, கொடமாத்தி, தெற்குபட்டி பகுதி கிராமங்களுக்கு செல்ல தார்சாலை வசதி இல்லாததால் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்று வந்தனர்.

இதனால் இந்த பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே வெள்ளிமலையில் இருந்து சின்னதிருப்பதிவரை கார், பஸ் போன்ற வாகனங்கள் செல்லும் வகையில் அகலமான தார்சாலை அமைத்து தரவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்களிடம் தொடர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அரசு நிர்வாகமும் செய்து தருவதாக மலைமக்களிடம் உறுதி அளித்தது.

அதைப்போல வெள்ளிமலையில் இருந்து மேல்பாச்சேரி, தாழ்பாச்சேரி, சின்னதிருப்பதி, முண்டியூர் உள்ளிட்ட 28 கிராமங்களை சேர்ந்த மலைமக்கள் காடு, மலைகளை கடந்து ஒத்தையடி பாதையில் நடந்து சென்றனர். அவ்வாறு செல்லும்போது கரடி போன்ற வனவிலங்குகளால் தாக்கப்பட்டு சிலர் இறந்துபோய் உள்ளனர். கல்வராயன்மலையில் நீண்ட காலமாகவே இதே நிலை நீடித்து வந்தது.

மேலும் சாலை வசதி இல்லாததால் மலை விவசாயிகள் உற்பத்தி செய்த மரவள்ளி, பலா பொருட்களை விற்பனைக்கு எடுத்து செல்ல கஷ்டமாக இருந்தது. இதனால் போக்குவரத்திற்கும், விவசாய பொருட்களை எடுத்து செல்லவும் ஏற்ற வகையில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் மக்கள் அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் உதயசூரியன் எம்எல்ஏ தீவிர முயற்சியால் மலைமக்களின் நலன்கருதி ரூ.139 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கி இப்போது பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் இந்த சாலையின் குறுக்கே கல்லாறு, பாலாறு, எட்டரைப்பட்டி அருகே ஒரு பாலம் என 3 பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தடுப்பு சுவர் கட்டுதல், சிறுபாலம் கட்டுதல், தார் சாலை அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சாலை போடப்பட்டால் கல்வராயன்மலையில் பாதி கிராம மக்கள் அதாவது 50 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த சாலை அமைக்கும் பணி முடிவுற்றால் அடுத்த ஒரு ஆண்டிலேயே திருப்பதி கோயிலுக்கு இணையாக சின்னதிருப்பதி கோயிலும் மக்களிடையே பிரசித்தி பெற்ற கோயிலாக மாறும். சின்னதிருப்பதி கோயிலுக்கு மக்கள் கூட்டமும் அதிகரிக்கும்.

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஆட்சியில் இருமுறை அமைச்சராக மோகன் இருந்த நிலையில் அப்போது செய்ய முடியாத சாதனையை திமுக அரசு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கல்வராயன்மலையில் சுமார் ரூ.500 கோடிக்குமேல் தார் சாலை வசதிகள் செய்து முடிக்கப்பட்டதுடன், கல்வராயன்மலையில் அரசு பேருந்து பணிமனையை அமைத்து இலவச மகளிர் விடியல் பேருந்து பயண திட்டத்தையும் துவக்கி வைத்துள்ள பெருமை உதயசூரியன் எம்எல்ஏவையே சேரும்.

இதனால் மலை மக்கள் கல்வராயன்மலையில் தொழிற்சாலைகள் அமைந்திட, சுற்றுலாத்தளம் ஆக்கிட திராவிட மாடல் அரசே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் உதயசூரியனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர்.

Related Stories: