திராவிட மடலின் யூத் ஐகான் கோகிலமணி : கமல்ஹாசன்

கோவை : கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கோவை தெற்கு தொகுதிக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

செந்தில்பாலாஜி கரூரில் இருந்து கோவைக்கு வந்தது, 15 கட்சிகளை ஒன்றாக திரட்டிய முதல்வர் ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்கு கொடுத்த அசைன்மென்ட் என்று கூறிய கமல்ஹாசன், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு ஆனால் வாகை சூட வந்தால் பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவித்தார். 100 வார்டுகளில் 96 வார்டுகளை வென்று காட்டியவர் செந்தில்பாலாஜி அவர் அந்த சரித்திரத்தை மீண்டும் அவரால் நிகழ்த்தி கட்ட முடியும் என்னுடைய 50ம் சேரும் அதில் என்றார்.

தொடர்ந்து அவிநாசி தனி தொகுதியில் போட்டியிடும் திமுக இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலமணியை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை செய்தார். எளிய குடும்பத்திலிருந்து வந்து கொரோனாவின் போது தன்னலமற்ற சேவை செய்தவர் கோகிலமணி என்று கூறிய கமல்ஹாசன் அவருக்கு பிரச்சரம் செய்யவேண்டும் என்று கேட்டு இங்கு வந்ததாக தெரிவித்தார். திராவிட மடலின் யூத் ஐகான் டாக்டர் கோகிலமணி. அரசு பள்ளியில் பயின்று சமூக நீதியால் முன்னுக்கு வந்தவர் கோகிலமணி. மத்திய அமைச்சரை துணிவுடன் எதிர்கும் புறனாநூற்று வீரமங்கை போன்றவர் கோகிலமணி.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் வடக்கில் இருந்து வரும் ஆபத்தை தடுத்து ஆகவேண்டும் என்றும் தமிழினத்தின் துரோகிகளை விரட்டியாக வேண்டும் என்றால் வீட்டுக்கு ஒரு கோகிலமணி வர வேண்டும் என்றார் கமல்ஹாசன்.

 

Related Stories: