தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி அடிப்போம்: அவிநாசி தொகுதியில் கமல்ஹாசன் பரப்புரை

திருப்பூர்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோகிலாமணியை ஆதரித்து அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் கமல்ஹாசன் எம்.பி. பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது; “திராவிடம் நாடு தழுவியது என்பதை தைரியமாக சொல்பவன் நான். மகளிர் உரிமைத்தொகையை எங்கிருந்து கொடுக்கிறார் என்கிறார்கள். உங்கள் சொத்து உங்களிடமே வர வேண்டும். வடக்கில் இருந்து நம்மை தேய்த்துக்கொண்டும். இடித்துக் கொண்டும் இருந்தவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகம் பேர் நின்றிருப்பார்கள். தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி அடிப்போம். வந்தாரை வாழ வைப்போம்; வாகை சூட நினைத்தால் விரட்டி அடிப்போம். தற்போதுள்ள மக்களவை தொகுதிகள் அடிப்படையில் மகளிருக்கு 33% சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கும் வரை விடமாட்டோம்.

கடல் கடந்து அண்டிருக்கிறோம், கல்வியை வைத்து ஆளலாம் என்பதற்கு கோலிலாதான் உதாரணம். ஏப்.23ல் நீங்கள் நல்ல தீர்ப்பை அளித்தே ஆக வேண்டும், வடக்கில் இருந்து வரும் ஆபத்தை தடுத்தே ஆக வேண்டும். உங்கள் சின்னம் உதயசூரியன். அந்த சின்னத்துக்கு வாக்களியுங்கள். அந்த பெட்டி என்னை ஒருமுறை ஏமாற்றியிருக்கிறது. மறுபடியும் ஏமாறக்கூடாது. மக்கள் என்னை ஏமாற்றவில்லை. சதி தான் ஏமாற்றியது. விழிப்பாய் இருங்கள். தமிழ்நாடு தான் என்னுடைய அணி. நாங்கள் விளையாட வரவில்லை. மறுபடியும் ஜெயிக்க வையுங்கள்” இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: