டெல்லியில் கடும் புழுதிப் புயல் காரணமாக பொதுமக்கள் அவதி..!!

டெல்லி: டெல்லியில் கடும் புழுதி புயல் வீசுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதலே டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புழுதி காற்று வீசி வருகிறது. குறிப்பாக இந்தியா கேட், பட்பர்கஞ், பூச உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் நிலவும் சூறாவளி சுழற்சி காரணமாக டெல்லியில் புழுதி புயல் ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தூசியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முகமூடிகளைப் பயன்படுத்தினர். இந்த பரவலான தூசி படலத்தால் காற்றில் தெரிவுநிலை மிகவும் குறைவாக உள்ளது. என்சிஆர் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை வீசுகிறது.கடந்த ஐந்து நாட்களாக கடும் வெயிலால் டெல்லி மக்கள் தவித்து வரும் நிலையில் இந்த புழுதிப் புயல் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.

The post டெல்லியில் கடும் புழுதிப் புயல் காரணமாக பொதுமக்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Related Stories: