கலெக்சன் ஊழியரின் பைக்கில் வைத்திருந்த ரூ.48 ஆயிரம் திருட்டு

பெரம்பூர்: அனகாபுத்தூர் ராஜாஜி சாலையை சேர்ந்தவர் அருண் வினோத்குமார் (31). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வியாசர்பாடி, எம்கேபி நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் வீட்டு உபயோகப் பொருட்களை தவணை முறையில் வாங்கிய நபர்களிடம் தவணை பணத்தை அருண் வசூல் செய்தார். பின்னர் பைக்கில் பெரம்பூர் டேங்க் லிங்க் சாலையில் சென்றபோது அங்கிருந்த கடையில் பைக்கை நிறுத்திவிட்டு கூழ் குடித்துள்ளார். அப்போது, கலெக்சன் செய்த ரூ.48 ஆயிரத்தை பைக் டேங்க் கவரில் வைத்திருந்தார். கூழ் குடித்துவிட்டு மீண்டும் பைக்கை எடுத்தபோது டேங்க் கவரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

The post கலெக்சன் ஊழியரின் பைக்கில் வைத்திருந்த ரூ.48 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: