கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய புதுச்சேரியிலிருந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வந்தமதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது

பொள்ளாச்சி புதுச்சேரியிலிருந்து பொள்ளாச்சிக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 822 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் பொள்ளாச்சியிலிருந்து கேரள செல்லும் சாலையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேனில் இருந்த அட்டை பெட்டிகளில் மொத்தம் 822 மதுபாட்டில்கள் இருப்பதை அறிந்தனர்.
இதையடுத்து, வேனில் வந்த செந்தில்குமார் (40), அவரது நண்பர்களான விக்னேஷ்பிரபு (34), ஆனந்தகுமார் (41) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், புதுச்சேரியிலிருந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வற்காக, கடத்தி கொண்டு வந்ததும் அதனை ஆனந்தகுமார் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 822 மதுபாட்டில்களையும் அதனை விற்பனை செய்வதற்காக கடந்தி வந்த வேனையும் பறிமுதல் செய்தனர். மதுப்பாட்டில்கள் கடத்திய செந்தில்குமார், விக்னேஸ்பிரபு, ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பொள்ளாச்சி அருகே பரபரப்பபை ஏற்படுத்தியது.

The post கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய புதுச்சேரியிலிருந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வந்தமதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: