சென்னையில் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் கைது

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் அற்புதம் (54) என்ற தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் கபாலி (75) கைது செய்யப்பட்டார். வேளாங்கண்ணி தேவாலயம் அருகே கழிப்பறையை குத்தகைக்கு எடுத்து அற்புதம் நடத்தி வருகிறார். அற்புதம் வளர்த்துவரும் அவரது உறவுக்கார பெண்ணை, கபாலியின் -மகன் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் அற்புதத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பிய கபாலியை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் கைது appeared first on Dinakaran.

Related Stories: