சேலம் அருகே கூட்டுறவு சங்கத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.1 கோடி கையாடல் உதவி செயலர், எழுத்தர் டிஸ்மிஸ்

சேலம்: சேலம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1கோடி மோசடி செய்த உதவி செயலாளர், தலைமை எழுத்தரை டிஸ்மிஸ் செய்து செயலாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2017 முதல் 2020 வரை (அதிமுக ஆட்சியில்) பயிர்கடன் உள்பட பல்வேறு இனங்களில் ரூ.3.63 கோடி அளவிற்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கூட்டுறவு உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கூட்டுறவு சங்க செயலாளர் மோகன், உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர்.

இதுதொடர்பான புகாரின்படி சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செயலாளர் மோகன், தலைவராக இருந்த சத்யபானு, உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கூட்டுறவு துணை பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சங்க செயலாட்சியர் கவிதா விசாரணை நடத்தினார். இதில் உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோர் ரூ.1.08 கோடி கையாடல் செய்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். செயலாளர் மோகன் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

The post சேலம் அருகே கூட்டுறவு சங்கத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.1 கோடி கையாடல் உதவி செயலர், எழுத்தர் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Related Stories: