ஏரல் அருகே உமரிக்காடு பள்ளியில் முப்பெரும் விழா

ஏரல், மார்ச் 17: ஏரல் அருகே உள்ள உமரிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஜெசுராஜன் செல்வக்குமார் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராணி, கிராம விவசாய சங்கம் தலைவர் நடேசன் மலப்பழம், பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மேரி எலிசபெத் மனோன்மணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஜெயஷீலா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் மாநில திமுக மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, வைகுண்டம் யூனியன் கவுன்சிலர் சித்ரா மற்றும் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் சுந்தரி நன்றி கூறினார்.

Related Stories: