உளவியல் ஆலோசனை கூட்டம்

சாத்தான்குளம், ஏப். 23: சாத்தான்குளம் அரசு கல்லூரியில் உளவியல் ஆலோசனை கூட்டம் நடந்தது.கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை வகித்தார். பேராசிரியை மரிய செல்வி ஜெயா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மனநலம் மற்றும் மாற்று மருத்துவ ஆலோசகர் சேசு, மனரீதியான அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறை, வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையூட்டும் ஆலோசனைகள் வழங்கிப் பேசினார். சமூக ஆர்வலர் சிலுவை அந்தோனி, மாணவியருக்கு கணினி ஒளிப்பதிவு மூலம் ஆலோசனை வழங்கினார். இதில் கல்லூரியின் அனைத்து துறை மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர். பேராசிரியர் பிரேசில் நன்றி கூறினார்.

The post உளவியல் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: