தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் புதிய சாலை வசதிகள்

தூத்துக்குடி, ஏப்.26: தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் புதிய சாலை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் மேற்கு குருவிமேடு பகுதியை சார்ந்த பொதுமக்கள் சமீபத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து தங்கள் பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு மற்றும் புதிய சாலை வசதிகள் செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் மின்சார இணைப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரிவித்து ஜூன் 5ம் தேதிக்கு பிறகு அதற்காக பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். மேலும் அந்தப் பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று அமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர். அதையும் வரும் காலங்களில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். அப்போது அவருடன் வட்ட செயலாளர்கள் சரவணன், ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் சரவணகுமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் இசக்கிமுத்து, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வட்ட துணை செயலாளர் கணேசன், வட்ட பிரதிநிதி ஹரி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் புதிய சாலை வசதிகள் appeared first on Dinakaran.

Related Stories: