சிங்கத்தாகுறிச்சி சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

செய்துங்கநல்லூர், ஏப். 25: சிங்கத்தாகுறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை மருத்துவ அலுவலர் லட்சுமி துவக்கி வைத்தார். இதில் 12 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 11 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரகீம் ஹீரா நன்றி கூறினார். முகாமில் நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யமாள், எக்ஸ்ரே நுட்பனர்கள் கிறிஸ்டின் குமாரதாஸ், கிருஷ்டி, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, ஆய்வக நுட்பனர் முனீஸ்வரி, எக்ஸ்ரே நுட்பனர் வில்பிரட், அரி பாலகிருஷ்ணன், டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் கணேசன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிங்கத்தாகுறிச்சி சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: