தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 17ல் 7 இடங்களில் 24 மணி நேர தர்ணா மார்க்சிஸ்ட் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தூத்துக்குடி, மார்ச் 12:  சிஏஏவுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்களில் வரும்  17ம் தேதி 24 மணி நேர தொடர் முழக்க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடியில்  உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் அதன் கூட்டணி  கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன்  தலைமை வகித்தார். இதில்  விசிக  மாவட்டச் செயலாளர் அகமது இக்பால், எம்எம்கே தலைவர் சம்சுதீன்,  செயலாளர் முகமதுஜான், கிருத்துவ வாழ்வுரிமை இயக்கம் சுந்தரி மைந்தன்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து, தமிழக ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  சீனிவாசன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர்.  சிஏஏ, என்ஆர்சி, என்பிசியை திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடி  மாவட்டத்தில் 7 இடங்களில் வரும் 17ம் தேதி 24 மணி நேர தொடர் முழக்க  போராட்டம் நடத்துவது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: