மருத்துவர் சமுதாயத்தினருக்கு எம்பிசி பட்டியலில் 5 சதவீத இடஒதுக்கீடு

தூத்துக்குடி, பிப்.19: மருத்துவ சமுதாயத்தினருக்கு எம்பிசி பட்டியலில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடியில் நடந்த தமிழ்நாடு முடிதிருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு  முடிதிருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் மற்றும் மருத்துவர்  சமுதாய பேரவை சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்  தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பழனி தலைமை வகித்தார். மாநில  பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,  தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத் தலைவராக பசுவந்தனை இசக்கிமுத்து, மாவட்டச்  செயலாளராக விஜயகுமார், பொருளாளராக பாண்டியன், துணைத் தலைவராக  சுடலைமணி, அமைப்பாளராக நல்லதம்பி, துணைச் செயலாளராக ராஜ்குமார், துணை  அமைப்பாளராக ராஜதுரை, மாநில துணைச் செயலாளராக மனோகரன், தென்மண்டல அமைப்பாளராக  செல்வராஜ், மாவட்ட இளைஞரணி தலைவராக மாரிமுத்து, செயலாளராக பகத்சிங்,  அமைப்பாளராக மகாலிங்கம், துணைச் செயலாளராக கோமதிராஜ், பால்முருகன், பெரியசாமி தேர்வு செய்யப்பட்டனர்.

 அத்துடன் தூத்துக்குடி மாநகர வடபகுதி தலைவராக  பெரியசாமி, செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக முருகன், மாநகர தென்பகுதி  தலைவராக சின்னதுரை, செயலாளராக ஸ்டாலின், பொருளாளராக சண்முகம், மாநகர  அமைப்பாளராக சந்திரசேகர், சட்ட ஆலோசகராக பாலவினோத்குமார் ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்  சித்திரைவேல், ஆத்தியப்பன், சரவணக்குமார், ஆத்திக்கண், ஐயப்பன், திருப்பதி,  திருமணி, சுப்பிரமணியன், தூத்துக்குடி மருத்துவ குல ஐக்கிய சங்கத் தலைவர்  கிருஷ்ணன், மருத்துவ சமுதாய முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லையா பங்கேற்றனர். மாவட்டத்தில் இலவச  வீட்டுமனைப்பட்டா கோரி மனு அளித்தவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். கோவில்பட்டி, வைகுண்டம் தாலுகாவில் இலவச  வீட்டுமனைப்பட்டா வழங்கியவர்களுக்கு நிலம் வழங்க ஆவன செய்ய வேண்டும். மருத்துவ சமுதாய மக்களுக்கு மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: