சாத்தான்குளம் அருகே சாலையோர செடிகள் அகற்றம்

சாத்தான்குளம், ஜன.29: சாத்தான்குளம் அருகே சாலையோரத்தில் அபாய நிலையில் காணப்பட்ட செடிகள்  அகற்றப்பட்டன.சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து பேய்க்குளம் இடையே சாலையோரங்களில் செடிகள் அதிக உயரத்தில் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலை பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு சாலையோரத்தில் அடர்ந்து வளர்ந்து காணபட்ட செடிகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து செடி வளர விடாமல் நெடுஞ்சாலைதுறையினர் கண்காணித்து அப்புறப்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். செடிகளை அப்புறப்படுத்திய நெடுஞ்சாலை பணியாளர்களை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: