இளம்பெண் பலாத்காரம் மகன், தாய் மீது வழக்கு

தூத்துக்குடி, ஜன.28: தூத்துக்குடியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தாய் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது மகன் முகமது நஷீர் (20). இவர் 20 வயது இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது முகமது நஷீர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அனைத்து மகளிர்  போலீசார், முகமது நஷீர் மற்றும் அவரது தாய்  சுலைகா பீவி (45) ஆகியோர் மீது பாலியல் மற்றும் மிரட்டல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: