×

விவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தஞ்சை, ஜன. 22: தஞ்சையில் வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான் நாகூரான் நினைவு தினத்தையொட்டி தஞ்சையில் தஞ்சையில் வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தனர். சிஐடியூ மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் அபிமன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் மாலதி, திருவையாறு ராஜா, இந்திய வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருளரசன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED ஈரமான நெல்லை உலர்த்தும் நவீன இயந்திரம்