தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

தூத்துக்குடி,ஜன.20: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடந்தது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 1,222 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு துவங்கி மாலை வரை நடந்த இந்த முகாமில் 1,35,629 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வருபவர்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Advertising
Advertising

 போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொதுசுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5,238 நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இப்பணிகளுக்கு 134 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்கள் எந்தவொரு குழந்தையும் விடுபடாத வகையில் அனைத்து குழந்தைகளுக்கும் கண்டிப்பாக சொட்டு மருந்து வழங்கி இளம்பிள்ளைவாதம் இல்லாத நிலையை ஏற்படுத்திட ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இந்த முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று முதல் வீடு வீடாக சென்று அலுவலர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

ஏரல்: ஏரல் அருகே பண்டாரவிளை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். பண்டாரவிளை அரசு டாக்டர் காளிமாணிக்கம், மருந்துஅலுவலர் ஜெயகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் புவனேஸ்வரி, தமிழரசி, வைகுண்டம் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், வைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் கருப்பசாமி, வை. யூனியன் துணை தலைவர் விஜயன், யூனியன் கவுன்சிலர் முத்துசெல்வன், பழையகாயல் பஞ்சாயத்து தலைவர் செல்வக்குமார், சிறுத்தொண்டநல்லூர் செயலாளர் நயினார், உடன்குடி தாமோதரன், மங்கலகுறிச்சி சண்முகவேல், ஏரல் ரத்தினசபாபதி, பண்டாரவிளை பாஸ்கர், பெருங்குளம் முருகன், குலசை சங்கர் மற்றும் அதிமுக பிரமுகர்கள் பால்துரை, திருத்துவசிங், கல்விகுமார், மணி, முத்து, அருணாசலம், காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமினை துவங்கி வைத்தார். தொடர்ந்து முகாமிற்கு வந்த குழந்தைகள் 50 பேருக்கு திருச்செந்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் பீடிங் பாட்டல் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அலுவலர் பொன்ரவி, குழந்தைகள் நல அரசு மருத்துவர் ப்ரித்தி, பிச்சிவிளை அரசு ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நஸ்ரின் பாத்திமா, யூனியன் துணை சேர்மன் ரெஜிபர்ட் பர்னாந்து, யூனியன் கவுன்சிலர்கள் செல்வன், வாசுகி, அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கணேசன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் ராஜாநேரு, சுதர்சன் வடமலைபாண்டியன். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார், திருச்செந்தூர் கோல்டன் ரோட்டரி சங்க தலைவர் கணேஷ்குமார், துணைத்தலைவர் செல்வின், ரோட்டரி பட்டைய தலைவர் கண்ணன், முன்னாள் தலைவர் சிவபிரசாத், போட்டோ கண்ணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

 வைகுண்டம்: வைகுண்டம் அரசு மருத்துவமனையில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வசந்தா மணி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.  மருத்துவ அலுவலர் மருத்துவர் வெங்கட் ரெங்கன், பணி மருத்துவர் நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பராங்கிரமபாண்டியில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் ஊராட்சி மன்றத்தலைவர் சரவண பெருமாள் தலைமை வகித்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

Related Stories: