பாஞ்சாலங்குறிச்சியில் ஜன.16ல் சுற்றுலா பொங்கல் தின விழா

ஓட்டப்பிடாரம், ஜன.14: பாஞ்சாலங்குறிச்சியில் ஜன.16ம் தேதி சுற்றுலா பொங்கல் தின விழா கொண்டாடப்படுகிறது.  இதுகுறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான தை பொங்கலை முன்னிட்டு கரி நாளன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அன்றைய தினத்தில் சுற்றத்தாரோடு இனிமையாக பொழுதுபோக்குவர். இதேபோல் நாளை மறுதினம் (ஜன.16ம் தேதி) தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை வளாகத்தில் பொங்கல் சுற்றுலா விழா-2020 சிறப்பாக கொண்டப்படுகிறது.அன்றைய தினம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாவட்ட இசைப்பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.   எனவே சுற்றுலா பயணிகளுக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகமும் வீர சக்கதேவி ஆலயக்குழுவினரும் செய்துவருகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: