கோவில்பட்டி, டிச. 29: கோவில்பட்டி அருகே ஓய்வுபெற்ற விமான நிலைய ஊழியர் உள்பட 2 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த கிருஷ்ணாநகர் மன்னார் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் கணபதி (68). ஓய்வுபெற்ற விமானநிலைய ஊழியரான இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு, தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு பதறினார். மேலும் பிரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.7,500 ஆகியன மர்ம நபர்களால் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் இதே பகுதியில் 3வது தெருவில் வசித்து வருபவரும் அரசு விரைவு பஸ்சில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான குருசாமி (63), சென்னை சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார்.