ஓட்டப்பிடாரம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஓட்டப்பிடாரம், நவ. 22: ஓட்டப்பிடாரத்தில் சைல்டு லைன் 1098 சார்பில்  குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு மற்றும் பசுமை பாதுகாப்பு குறித்து தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பணித்தள பொறுப்பாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சைல்டு லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்எல்ஏ கலந்துகொண்டு அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஓட்டப்பிடாரம் வஉசி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மேரி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாணி ஆகியோர் குழந்தைகள் பாதிக்கப்படும் விதங்கள் குறித்தும், அதிலிருந்து அவர்களை மீட்பதன் அவசியம் குறித்தும் விளக்கினர். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, காணாமல் போன குழந்தைகள் மற்றும் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதை தடுப்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. சைல்டுலைன் நிர்வாகி அருண் குமார் நன்றி கூறினார்.

Related Stories: