தாமிரபரணி பட்டா நிலங்களில் மணல் கொள்ளை வைகுண்டத்தில் பாஜவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வைகுண்டம், நவ. 6: தாமிரபரணி ஆற்றின் கரையோர பட்டா நிலங்களில் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி வைகுண்டத்தில் பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

   வைகுண்டம், ஏரல் தாலுகாகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள பட்டா நிலங்களில் விவசாய பயன்பாட்டிற்காக உவர் மண் அள்ள வருவாய் துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். இந்த அனுமதியை மணல் கொள்ளையர்கள் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பல அடி ஆழத்திற்கு பள்ளம்தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மணல் கொள்ளையை தடுத்துநிறுத்த வலியுறுத்தி வைகுண்டத்தில் பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 வைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் சித்திரை முன்னிலை வகித்தனர். வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் துவக்கிவைத்துப் பேசுகையில் ‘‘தற்போது, பட்டா நிலங்களில் இருந்து மண் எடுப்பதாக கூறி மணல் கொள்ளையர்கள் பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார் அவர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வீரமணி, மகளிர் அணி மாவட்ட துணைத்தலைவர் சித்திரை செல்வி, விவசாய அணி மாவட்டச் செயலாளர் வேலையா, எஸ்.சி., எஸ்.டி., அணி மாநில பொறுப்பாளர் பல்க் பெருமாள், மாவட்டச் செயலாளர் சுதா, இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர், விக்னேஷ், நகரத் தலைவர்கள் வைகுண்டம் காசிராமன், பெருங்குளம் சின்னத்துரை, ஏரல் பரமசிவன், சாயர்புரம் பெரியசாமி, ஆழ்வார்திருநகரி இசக்கி முத்து,

கருங்குளம் ஒன்றிய பொறுப்பாளர் கேசவன், வணிகர் பிரிவு சாமிநாதன், மக்கள் நலச் சங்க ஒருங்கினைப்பாளர் பிச்சை கண்ணன் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், விவசாயிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: