மாவோயிஸ்ட்டுகள் கோர்ட்டில் ஆஜர்

கோவை, செப்.19:  கோவை மாவட்ட கோர்ட்டில் மாவோஸ்ட்டுகள் ரூபேஷ், அவரது மனைவி சைனா, கண்ணன், அனூப், ஈஸ்வரன் ஆகியோர் நேற்று ஆஜராகினர். கருமத்தம்பட்டியில் இவர்கள் 3 ஆண்டிற்கு முன் போலீசில் பிடிபட்டனர். சதி செயல்களில் இவர்கள் ஈடுபட திட்டமிட்டு கோவை வந்ததாக தெரிகிறது. இதில் கைதானவர்கள் ேகாவை மற்றும் வெளி மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.  வழக்கு விசாரணைக்காக ரூபேஷ் உட்பட 5 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது இவர்கள், கோர்ட் வளாகத்தில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது சரியல்ல, இந்தியை திணிக்காதே என கோஷமிட்டனர். வழக்கு விசாரணைக்கு பின்னர், சைனா தவிர மற்றவர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: