ஓட்டு மெசின்களுக்கு பலத்த பாதுகாப்பு

 

கோவை, ஏப்.21: கோவை தொகுதியில் 3096 ஓட்டு சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, மின்னணு ஓட்டு மெசின்கள், விவிபேட், கட்டுபாட்டு கருவிகள் தடாகம் ரோட்டில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று வேட்பாளர்கள், கலெக்டர் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கலெக்டர் கிராந்தி குமார் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘கோவை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைத்துள்ளோம். தொகுதி வாரியாக 6 ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவம், காவல்துறையினர் என ஒரு ஷிப்டுக்கு 235 பேர் என சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். அனைத்து ரூம்களின் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் கேமரா கண்காணிப்பில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டாலும் பேட்டரி மூலமாக மின் இணைப்பு தடைபடாமல் கிடைக்கும். பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

The post ஓட்டு மெசின்களுக்கு பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: