குப்பை கிடங்கில் தண்ணீர் தெளிக்க உத்தரவு

 

கோவை, ஏப்.21: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் வெயில் காலங்களில் அடிக்கடி தீ பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. நகரில் மாநகராட்சியின் 100 வார்டில் இருந்து தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் இங்கு குவிக்கப்பட்டு வருகிறது. குப்பைத்தொட்டியில் சிலர் ஓட்டல் கடைகளின் சாம்பல் கழிவுகளை கொட்டுவதாக தெரிகிறது. இந்த சாம்பலில் உள்ள எரியும் கரிதுண்டுகளும் குப்பைகளுடன் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வந்து குவிக்கிறார்கள்.

முறையாக தரம் பிரிக்காமல் லோடு கணக்கில் குவியும் குப்பைகளில் எளிதாக தீப்பிடித்து விடுகிறது. வெயில் காரணமாக, புதிதாக கொட்டப்படும் குப்பைகளில் மீத்தேன் வாயு உற்பத்தியாக அது தானாகவே தீப்பிடித்து எரிவதாகவும் தெரிகிறது. எதனால் எப்படி தீப்பிடிக்கிறது என உறுதி செய்ய முடியாமல் குப்பைக்கிடங்கில் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடுவது வாடிக்கையாகி போய்விட்டது. குப்பைக்கிடங்கு வளாகத்தில் சமீபத்தில் தீ பிடித்து சுமார் 60 ஏக்கர் குப்பைகள் சாம்பலானது.

இதில், தீ மற்றும் புகை காரணமாக வெள்ளலூர் சுற்று வட்டாரத்தில் சுமார் 30 ஆயிரம் வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் மூச்சுத்திணறலுடன் போராடி வருகின்றனர். குப்பைக்கிடங்கு விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லை.  பல ஆண்டாக கண் எரிச்சல், மூச்சு திணறல், துர்நாற்றத்துடன் போராடுகிறோம்.

தீ பரவல் தடுக்க வாகனங்களை கண்காணிக்க வேண்டும். குப்பை ெகாட்டும் போது அதில் தீ பிடிக்கும் நிலையிருக்கிறதா? என அறிய வேண்டும். தீ அணைக்க வாகனங்களை தயார் நிலையில் என வெள்ளலூர் பகுதி மக்கள் புலம்புகிறார்கள். இந்த பகுதியை மாநகராட்சியினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குப்பைகளில் அடிக்கடி தண்ணீர் தெளிக்க உத்தரவிடப்பட்டு பணி நடக்கிறது.

The post குப்பை கிடங்கில் தண்ணீர் தெளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: