தாசம்பாளையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேக விழா: முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்

 

மேட்டுப்பாளையம், ஏப்.21: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தாசம்பாளையம் பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தாசம்பாளையம் பகுதி மக்கள் ஸ்ரீநிவாச பெருமாளை வேண்டி தங்களது வீடுகளில் முளைப்பாரி போட்டு வளர்த்து வந்தனர்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் இருந்து அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்திற்கு மேள, தாளத்துடன் முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லக்கூடிய நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் தாங்கள் வளர்த்திருந்த முளைப்பாரியை பக்தி பரவத்துடன் தலையில் சுமந்து அதனை ஊர்வலமாக எடுத்து ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்துக்கு கொண்டு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அப்போது, ஸ்ரீ நினிவாச பெருமாளின் பஜனை குழுவினர் ஸ்ரீ ராம பாடல்களை பாடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை (22-ம் தேதி) காலை நடைபெற உள்ள நிலையில் யாக சாலைகளில் யாக வேள்விகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

The post தாசம்பாளையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேக விழா: முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: