அன்னூர்,ஏப்.25: அன்னூர் மாரியம்மன் கோவிலின் 34ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி துவங்கியது. 16ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதலும்,சிறப்பு வழிபாடும் நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து வருதலும்,திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்தனர்.
ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர். இத்துடன் பக்தர்கள் முதுகில் அழகு குத்தி அலங்கரிக்கப்பட்ட சிறிய தேர்களை சத்திரோடு, மெயின் ரோடு தென்னம்பாளையம் ரோடு வழியாக கோவில் சன்னதிக்கு அழைத்து வந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் அழகு குத்தி தேர் இழுக்கும் வைபவத்தில் பங்கேற்றனர்.
The post அன்னூர் மாரியம்மன் கோவில் திருவிழா அழகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள் appeared first on Dinakaran.