 ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியில் டிஜிட்டல் பல் மருத்துவ மையம் துவக்கம்

கோவை,ஏப்.25:கோவை  ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ‘ப்ளாசம்ஸ் டிஜிட்டல் டென்டிஸ்ட்ரி கிளினிக்’ என்ற புதிய சிகிச்சை வசதியை தொடங்கியுள்ளது. இதனை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி,கல்லூரி முதல்வர் டாக்டர் தீபானந்தன், அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது.

இந்த கிளினிக்கில் மேம்பட்ட வாய்வழி ஸ்கேனர்கள், 3-டி மாடல் பிரிண்டர்கள்,CAD CAM milling, Navigation Implant உபகரணங்கள் மற்றும் EXOCAD மென்பொருள் ஆகியவை உள்ளன. இதன் மூலம் நோயாளிகளுக்கு விரைவான மற்றும் துல்லியமான பல் நோயறிதல் மற்றும் சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

நேவிகேஷன் – வழிகாட்டப்பட்ட பல் உள்வைப்புகள் அறுவை சிகிச்சை, ஒரே நாளில் CAD / CAM செதுக்கப்பட்ட சிர்கோனியா மற்றும் செராமிக் செயற்கை பல்,ஆர்த்தடான்டிக்ஸ் அலைனர்ஸ் ஸ்கேனிங், 3D CBCT பட ஒருங்கிணைப்பு, உள்வைப்பு அறுவை சிகிச்சை வழிகாட்டிகள் அச்சிடுதல், விர்ச்சுவல் ட்ரீட்மென்ட் சிஎம்ஐ டிசைன், செயற்கை பல் காப்பிங்ஸ் பிரிண்டிங் மற்றும் உள்-வாய்வழி 3D ஸ்கேனிங் போன்ற சேவைகளை இந்த கிளினிக் வழங்குகிறது.

The post  ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியில் டிஜிட்டல் பல் மருத்துவ மையம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: