கோவை தொகுதியில் 64.42 சதவீத வாக்குப்பதிவு

 

கோவை, ஏப்.20: கோவை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிந்தது. மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். கோவை நாடாளுமன்ற தொகுதியில் கோவை, பொள்ளாச்சி என இரு தொகுதிகள் உள்ளன.

கோவை தொகுதியில் கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், பொள்ளாச்சி தொகுதியில் பொள்ளாச்சி, வால்பாறை, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.

கோவை நாடாளுமன்ற தொகுதியில், 10,41,349 ஆண் வாக்காளர்களும், 10,64, 394 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக நேற்று பதிவான வாக்கு சதவீத விவரம்: கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதி ஆண், பெண் மற்றும் 3ம் பாலினத்தவர்கள் என மொத்த வாக்காளர்களின் வாக்குகள் 64.42 சதவீதம் ஆகும்.

The post கோவை தொகுதியில் 64.42 சதவீத வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: