புதுக்கோட்டை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

புதுக்கோட்டை, செப்.19: புதுக்கோட்டை அருகே ஆற்று மணல் கடத்திய லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்களை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் தனியார் கல்லூரி அருகே நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி சிறப்பு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக ஆற்றுமணல் ஏற்றி வந்த லாரியை மறித்தனர்.  டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஒடிவிட்டார். இதேபோல் தெற்கு சிலுக்கன்பட்டியில் வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார் அவ்வழியாக வந்த மணல் லாரியை மறித்ததும் லாரியை விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இரண்டு லாரியையும் புதுக்கோட்டை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: