முத்தையாபுரம் பகுதியில் பணம் செலுத்தியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என புகார்

ஸ்பிக்நகர், செப். 10: தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சந்தனராஜ், தூத்துக்குடி கலெக்டரிடம் அளித்த மனு: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இருந்து முள்ளக்காடு வரை, சாலையின் இருபுறங்களிலும் சேதமடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடையை மீண்டும் புதிதாக அமைத்து தர வேண்டும். முத்தையாபுரம் பகுதியில் இருந்து முள்ளக்காடு வரை சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். முத்தையாபுரம் பகுதியில் 4வது குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளுக்கு முறையாக பணம் செலுத்தியும் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே குடிநீர் குழாய் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். முத்தையாபுரம் பல்க் பேருந்து நிறுத்தம், துறைமுகம் மற்றும் ஸ்பிக் உரத் தொழிற்சாலை செல்லும் சந்திப்பில் ரவுண்டானா அமைத்து சாலை போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும்.

Advertising
Advertising

Related Stories: