சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் நாசரேத்தில் 20ம்தேதி மின்தடை

உடன்குடி, ஜூலை 18: மாதாந்திர பரமாரிப்பு பணிகள் காரணமாக சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் பகுதிகளில் வருகிற 20ம்தேதி மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து திருச்செந்தூர் மின்விநியோக பொறியாளர் பிரபாகர் கூறியிருப்பதாவது, சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் வருகிற 20ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் உபமின் நிலையத்தைச் சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் உபமின் நிலையத்தைச் சேர்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சேர்ந்த மெஞ்ஞானபுரம், அணைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி உப மின்நிலையத்தைச் சேர்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிருப்பு, காந்திநகர், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும் காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை மின்சாரம் இருக்காது என கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: